Thursday, December 29, 2011

ஆதிசங்கரரின் ஸ்ரீமந்த்ர மாத்ருகா புஷ்பமாலா

ஆதிசங்கரர் எழுதிய சுலோகம்   மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம் 
 

  தேவி வழிப்பாட்டில் ஸ்ரீவித்யா மார்க்கத்தில் அம்பிகைக்குரிய முக்கிய மந்திரம் ஒன்று இருக்கிறது. பதினைந்து எழுத்துக்களால் - அக்ஷரங்களால் - ஆகியது.



    ஓர் அக்ஷரம் என்பதை நாம் சாதாரணமாக 'எழுத்து' என்று குறிப்பிடும் பொருளில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இதில் மெய்யெழுத்துக்களைச் சேர்ப்பதில்லை.


                    உதாரணமாக -
    'மந்த்ர மாத்ருகா புஷ்பமாலா ஸ்தவம்' என்பதில்
    'மந்த்ர' - 2 அக்ஷரங்கள்
    'மாத்ருகா' - 3 அக்ஷரங்கள்
    'புஷ்பமாலா' - 4 அக்ஷரங்கள்
    'ஸ்தவம்' - 2 அக்ஷரங்கள்
    'பாண்ட்ய' என்பதில் 2 அக்ஷரங்கள்தாம்.
                    ஒவ்வொரு எழுத்துக்கும் மாத்திரைக்கணக்கு என்பதும் உண்டு. மெய்யெழுத்து, உயிரெழுத்து, உயிர்மெய்யெழுத்து, நெடில், குறில், அளபு போன்றவற்றிற்கெல்லாம் குறிப்பிட்ட மாத்திரைக் கணக்கு   உண்டு.


                    பதினைந்து அக்ஷரங்கள்.
                    ஆகையால் அதற்கு 'பஞ்சதசாக்ஷரி' என்று பெயர்.


                    பதினாறு பாடல்கள் அந்த தோத்திரத்தில் இருக்கும்.
                    பஞ்சதசாக்ஷரியில் இருக்கும் பதினைந்து பாடல்கள்.
                    பதினாறாவது பாடல் பலஸ்ருதி எனப்படும் பலன்களைச் சொல்லும் ஆசீர்வாதப்பாடல். தமிழில் இதனைத் 'திருக்கடைக்காப்பு' என்று குறிப்பிடுவார்கள்.


                    ஒவ்வொரு பாடலும் பஞ்சதாசாக்ஷரியின் ஒவ்வொரு எழுத்தில் தொடங்கும்.
    ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு உபசாரத்தைச் செய்வதாக அறிவிக்கும்.


    முதற் பாடல்.


கல்லோ லோல்லஸித அம்ருதாப்தி லஹரி
    மத்யே விராஜன் மணீ
த்வீபே கல்பக வாடிகா பரிவ்ருதே
    காதம்பவாட் யுஜ்வலே
ரத்னஸ்தம்ப ஸஹஸ்ர நிர்மித ஸபா
    மத்யே விமானோத்தமே
சிந்தாரத்ன விநிர்மிதம் ஜனனி தே
    ஸிம்ஹாஸனம் பாவயே


    பொருள்: அலைகள் விளங்கும் அமுதக்கடலில் சோபிக்கும் மணித்தீவில்,  
        கற்பகமரங்கள் சூழ்ந்த  கதம்பவனத்தில், ரத்தினத் தூண்கள்  நிறைந்த
        சபை நடுவில் இருக்கக்கூடிய விமானத்தில்  உன்னுடைய சிந்தாமணி
        என்னும் சிம்மாசனத்தைத் தியானம்  செய்கிறேன்.


    இரண்டாவது பாடல்:


ஏணாங்கானல பானுமண்டல லஸத்
    ஸ்ரீசக்ர மத்யே ஸ்திதாம்
பாலார்க்க த்யுதி பாஸ¤ராம் கரதலை:
    பாசாங்குசௌ பிப்ரதீம்
சாபம் பாணம் அபி ப்ரஸன்ன வதனாம்
    கௌஸ¤ம்ப வஸ்த்ரான் விதாம்
தாம் த்வாம் சந்த்ர கலாவதம்ஸ மகுடாம்
    சாருஸ்மிதாம் பாவயே


பொருள்: சந்திர சூரிய அக்கினி மண்டலங்கள் கூடிய ஸ்ரீசக்கரத்தில்
    அமர்ந்து, கரங்களில் பாசம், அங்குசம், வில், அம்பு ஆகியவை
    தாங்கி, இளஞ்சூரியனாக மலர்ந்த முகமும், சிவந்த உடையும்,
    மகுடத்தில் பாதி மதியும் கொண்டு, மந்தஹாசத்துடன் விளங்கும்
    உன்னை தியானிக்கிறேன்.


    மூன்றாவது பாடல்:


ஈசானாதிபதம் சிவைக பலகம்
    ரத்னாசனம் தே சுபம்
பாத்யம் குங்கும சந்தனாதி பரிதைர்
    அர்க்யம் ஸரத்னாக்ஷதை:
சுத்தை ராசமனீயகம் தவ ஜலைர்
    பக்த்யா மயா கல்பிதம்
காருண்ய அம்ருத வாரிதே ததகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: ஈசன் முதலாகிய நான்கு தேவர்களைக் கால்களாகவும்
    சதாசிவனைப் பலகையாகவும்கொண்ட சிம்மாசனத்தையும்,
    குங்குமப்பூ, சந்தனாதி பொருட்கள் நிறைந்த நீரினால்
    பாத்யத்தையும், அர்க்யத்தையும், ரத்தின அக்ஷதையுடன்
    கூடிய நீர்களால் ஆசமனீயத்தையும் பக்தியுடன் உனக்குக்
    கல்பிக்கிறேன். இவை உனக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.


    நான்காவது பாடல்:
   
லக்ஷ்யே யோகி ஜனஸ்ய ரக்ஷ¢த ஜகஜ்
    ஜாலே விசாலேக்ஷணே
ப்ராலேயாம்பு படீர குங்கும லஸத்
    கற்பூர மிச்ரோதகை:
கோக்ஷ£ரைரபி நாலிகேர ஸலிலை:
    சுத்தோதகைர் மந்த்ரிதை:
ஸ்நானம் தேவி தியா மயைத தகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: யோகிகளின் லட்சியமான தேவியே! அகண்ட விழிகளுடையவளே!
    குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைப்பொருள்கள்
    நிறைந்த குளிர்ந்த நீர், பசும்பால், இளநீர், மந்திரிக்கப்பட்ட
    சுத்தமான நீர் முதலியவற்றால் நீ மகிழ்வுறும்வண்ணம்
    திருமஞ்சன நீராட்டு செய்வதாகப் பாவிக்கிறேன்.


    ஐந்தாவது பாடல்:


ஹ்ரீங்காராங்கித மந்த்ர லக்ஷ¢த தநோ
    ஹேமாசலாத் ஸஞ்சிதை:
ரத்னைருஜ்வலம் உத்தரீய ஸஹிதம்
    கௌஸ¤ம்பவர்ணாம் சுகம்
முக்தா ஸந்ததி யஜ்ஞஸ¥த்ர மமலம்
    ஸௌவர்ண தந்தூத்பவம்
தத் தம் தேவி தியா மயைத தகிலம்
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: ஹ்ரீங்கார மந்திரத்தையே உடலாகக்கொண்டவளே! பார்வதியே!
    மணிக்கற்களால் பிரகாசிக்கும் உத்தரீயத்துடன் செந்நிற
    ஆடையும் பொற்தந்தியில் கோக்கப்பட்ட முத்துக்களால்
    ஆகிய பூணூலையும் உனக்கு சமர்ப்பிப்பதாகக் கல்பிக்கிறேன்.


    ஆறாவது பாடல்:


ஹம்ஸைரப் பதிலோபனீய கமனே
    ஹாரவலீம் உஜ்வலாம்
ஹித்தோல த்யுதிஹீர பூரி ததரே
    ஹேமாங்கதே கங்கணே
மஞ்சீரௌ மணிகுண்டலே மகுடம்
    அப்யர்த்தேந்து சூடாமணிம்
நாஸா மௌக்திகம் அங்குலீய கடகௌ
    காஞ்சீமபி ஸ்வீகுரு


பொருள்:    இந்தப் பாடலில் வெவ்வேறு விதமான ஆபரணங்களை
    அம்பிகைக்கு அணிவித்தலைக் குறிப்பிடுகின்றது. கடகம்,
    வாகுவளையம், கங்கணம், பாதகிங்கிணி, மணிகுண்டலம்,
    மகுடம், முத்து மூக்குத்தி-பில்லாக்கு, பொன் மோதிரம்,
    சூடாமணி, இடையணி முதலியவற்றை நான் உனக்கு
    (மானசீகமாக) அணிவிப்பதை நீ ஏற்றுக்கொள்வாயாக.


    ஏழாவது பாடல்:


ஸர்வாங்கே கனஸார குங்குமகன
    ஸ்ரீகந்த பங்காங்கிதம்
கஸ்தூரி திலகஞ்ச பாலபலகே
    கோரோசனா பத்ரகம்
கண்டாதர்சன மண்டலே நயனயோர்
    திவ்யாஞ்சனம் தேஅஞ்சிதம்
கண்டாப்ஜே ம்ருநாபி பங்கமமலம்
    த்வத் ப்ரீதயே கல்பதாம்


பொருள்: குங்குமப்பூ, நல்வாசனைப்பொருள்கள் சந்தனம் முதலியவற்றுடன்
    உடலுக்குப் பூச்சாக அணிவிக்கிறேன். கஸ்தூரி, கோரோசனை
    ஆகியவற்றால் நெற்றியில் திலகம் இடுகிறேன். முகம் பார்க்கும்
    கண்ணாடியுடன் கண்களில் திவ்வியமான அஞ்சன மையிடுகிறேன்.
    கழுத்துக்குக் கஸ்தூரி அணிவிப்பதாகக் கல்பிக்கிறேன்.


    எட்டாவது பாடல்:


கல்ஹாரோத்பல மல்லிகா மருவகை:
    ஸௌவர்ண பங்கேருஹை:
ஜாதீ சம்பக மாலதீ வகுலகைர்
    மந்தார குந்தாதிபி:
கேதக்யா கரவீரகைர் பஹ¤விதை:
    க்லுப்தா: ஸ்ரஜோ மாலிகா:
ஸங்கல்பேன ஸமர்ப்பயாமி வரதே
    ஸந்துஷ்டயே க்ருஹ்யதாம்


பொருள்: பலவிதமான மலர்கள் சூட்டி அம்பிகையை மகிழ்விப்பதை
    இப்பாடல் குறிப்பிடுகிறது. சென்க்கழுநீர், நீலம், மல்லிகை,
    மருக்கொழுந்து, பொற்றாமரை, ஜாதி மல்லிகை, முல்லை,
    மகிழம்பூ, மந்தாரை போன்ற மலர்களை என் சங்கல்பத்தால்
    உனக்கு சமர்ப்பிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வாயாக.


    ஒன்பதாவது பாடல்:


ஹந்தாரம் மதஸ்ய நந்தயஸி யைர்
    அங்கைர் அனங்கோஜ்வலை:
யைர் ப்ருங்காவலி நீல குந்தல பரைர்
    பத்னாஸி தஸ்யாசயம்
தானீமானி தவாம்ப கோமலதரான்
    யாமோத லீலாக்ருஹான்
யாமோதாய தசாங்க குக்குலு க்ருதைர்
    தூபைர் அஹம் தூபயே


பொருள்: பலவகையான வாசனைப்பொருள்கள், மருத்துவ மூலிகைப்
    பொருள்கள், தசாங்கம், குங்கிலியம் போன்றவற்றைக்
    கலந்து, மன்மதனை எரித்த சிவனும் மோகிக்கும்
    உன் அங்கங்களுக்கும் அவனைக் கவரும் கூந்தலுக்கும்
    தூபம் காட்டுகிறேன்.


    பத்தாவது பாடல்:


லக்ஷ்மீ முஜ்வலயாமி ரத்ன நிவஹோத்
    பாஸ்வத்தரே மந்திரே
மாலாரூப விலம்பிதைர் மணிமய
    ஸ்தம்பேஷ¤ ஸம்பாவிதை:
சித்ரைர் ஹாடக புத்ரிகாகரத்ருதைர்
    கவ்யைர் க்ருதைர் வர்த்திதை:
திவ்யைர் தீபகணைர் தியா கிரிஸ¤தே
    ஸந்துஷ்டயே கல்பதாம்


பொருள்: பசு நெய்யால் ஏற்றப்பட்ட திவ்ய தீபங்கள் கொண்டு
    உன்னுடைய சிறந்த அழகை இன்னும் சோபிக்கச்செய்கிறேன்.


    பதினோராவது பாடல்:


ஹ்ரீங்காரேஸ்வரி தப்த ஹாடக க்ருதை:
    ஸ்தாலீ ஸஹஸ்ரைர் ப்ருதம்
திவ்யான்னம் க்ருதஸ¥ப சாகபரிதம்
    சித்ரான்ன பேதம் ததா
துக்தான்னம் மதுசர்க்கரா ததியுதம்
    மாணிக்யபாத்ரே ஸ்திதம்
மாஷாபூப ஸகஸ்ர மம்ப ஸபலம்
    நைவேத்ய மாவேதயே


பொருள்: பல பொற்பாத்திரங்களில் பசுவின் நெய், பருப்பு, கறிவகைகள்,
    திவ்யான்னம், சித்ரான்னங்கள், தேன், பாற்சோறு, பலவிதமான
    பழங்கள், வடைகள் முதலியவற்றை மாணிக்கப்பாத்திரங்களில்
    நைவேத்தியமாக சமர்ப்பிக்கின்றேன்.


பன்னிரண்டாவது பாடல்:


ஸச்சாயைர் வரகேத கீதல ருசா
    தாம்பூலவல்லீ தலை:
பூகைர் பூரிசூர்ணை: ஸ¤கந்தி மதுரை:
    கர்ப்பூர கண்டோஜ்வலை:
முக்தாசூர்ண விராஜிதைர் பஹ¤விதைர்
    வக்த்ராம் புஜா மோதிதை:
பூர்ணாரத்ன கலாசிகா தவமுதே 
    ந்யஸ்தா புரஸ்தா துமே


பொருள்: வெற்றிலை, வாசனைப் பாக்குத்தூள், பச்சைக்கற்பூரம், முத்திலிருந்து
    தயாரிக்கப்பட்ட சுண்ணம்  முதலியவை கொண்ட ரத்தினத்தால்
    ஆன வெற்றிலைப் பெட்டியைச் சமர்ப்பிக்கின்றேன்.


பதின்மூன்றாவது பாடல்:


கன்யாபி: கமனீய காந்திபிர்
    அலங்காரா மலாராத்ரிகா
பாத்ரே மௌக்திக சித்ர
    பங்க்தி விலஸத் கர்ப்பூர தீபாலிபி:
தத்தத் தால ம்ருதங்க கீத ஸஹிதம்
    ந்ருத்யத் பதாம்போருஹம்
மந்த்ராரான பூர்வகம் ஸ¤நிஹிதம்
    நீராஜனம் க்ருஹ்யதாம்


பொருள்: பாட்டு, தாளமேளம், நாட்டியம் முதலியவற்றுடன் முத்துக்கள்
    வரிசையுடன் சிறந்துவிளங்கும் தீபப் பாத்திரத்தில் காந்தியுடன்
    விளங்கும் கற்பூர தீபத்தை உன் பாஅங்களுக்கு நீராஜனமாகக்
    காட்டுகிறேன்; ஏற்றுக்கொள்.


பதினான்காவது பாடல்:


லக்ஷ்மீர் மௌக்திக லக்ஷ கல்பித
    ஸிதச்சத்ரம் து தத்தே ரஸாத்
இந்த்ராணீ ச ரதிச்ச சாமரவரே
    தத்தே ஸ்வயம் பாரதீ
வீணா மேண விலோசனா: ஸ¤மனஸாம்
    ந்ருத்யந்தி தத்ராகவத்
பாவைராங்கிக ஸாத்லிகை: ஸ்புடரஸம்
    மாதஸ் ததா லோக்யதாம்


பொருள்: லக்ஷ்மி குடை பிடிக்க, இந்திராணியும் ரதியும் சாமரம் வீச
    சரஸ்வதி வீணை வாசிக்க, தேவமகளிர் நாட்டியம் ஆட,
    இசையுடன் கூடிய பாட்டுக் கேட்கப்படட்டும்.


    பதினைந்தாவது பாடல்:


ஹ்ரீங்காரத்ரய ஸம்புடேண
    மனுனோபாஸ்யேத்ரயீ மௌலிபி:
வாக்யைர் லக்ஷ்யதனோ தவ  ஸ்துதிவிதௌ
    கோ வா க்ஷமேதாம்பிகே
ஸல்லாபா: ஸ்துதய: ப்ரதக்ஷ¢ண சதம்
    ஸஞ்சார ஏவாஸ்து தே
ஸம்வேசோ மனஸ: ஸமாதி ரகிலம்
    த்வத்ப்ரீதயே கல்பதாம்


பொருள்: மூன்று ஹ்ரீங்காரங்கள் கூடிய மந்திரத்தால் உபாசிக்கப்
    படுபவளே! வேதாந்த வாக்கியங்களின் லட்சியமானவளே!
    என்னுடைய பேச்செல்லாம் உனக்கு தோத்திரங்களாகவும்,
    என் சஞ்சாரங்களெல்லாம் உனக்குப் பிரதட்சிணமாகவும்,
    நான் படுப்பதெல்லாம் உனக்கு நமஸ்காரங்களாகவும்
    இருக்கட்டும்.   


    பதினாறாவது பாடலை பலஸ்ருதி என்னும் அமைப்பில்
பாடியுள்ளார். திருஞானசம்பந்தரின் திருப்பதிகங்களின் பதினோறாவது
பாடலாகிய திருக்கடைக்காப்புப் போன்றது.




ஸ்ரீ மந்த்ராக்ஷர மாலயா கிரிஸ¤தாம்
    ய: பூஜயேத் சேதஸா
ஸந்த்யாஸ¤ ப்ரதிவாஸரம் ஸ¤நியதஸ்
    தஸ்யாமலம் ஸயான்மன:
சித்தாம்போருஹ மண்டபே கிரிஸ¤தா
    ந்ருத்தம் விதத்தே ரஸாத்
வாணீ வக்த்ர ஸரோருஹே ஜலதிஜா
    கேஹே ஜகன் மங்களா


    இந்த மந்திர அட்சர மாலையினால் அம்பிகையை யார்
துதிக்கிறார்களோ, அவர்கள் சித்த சுத்தி அடைவார்கள்; அவர்கள்
மனதில் தேவி நர்த்தனம் புரிவாள்; வாக்கில் சரஸ்வதியும்
அவர்களின் இல்லங்களில் லக்ஷ்மியும் வாசம் செய்வார்கள்.


இதி கிரிவ்ரபுத்ரீ பாதராஜீவபூஷா
    புவன மமலயந்தீ ஸ¥க்தி ஸௌரப்ய ஸாரை:
சிவபத மகரந்த ஸ்யந்தினீயம் நிபத்தா
    மதயது கவிப்ருங்கான்  மாதுருகா புஷ்பமாலா


இந்த மாத்ருகா புஷ்பமாலை மகிழ்ச்சியை தரட்டும  இதெல்லாம் மானச பூஜை. அதுவும் பஞ்சதாசாட்சரி மந்திரம் அடங்கியது.
Source-சாக்தஸ்ரீ டாக்டர் எஸ்.ஜெயபாரதி

3 comments:

  1. resp smt jayashree,

    first accept my pranams.

    i am not a scholar. but a person who is just mad after thiruppugal and abirami andhadi.

    in the devi sthuthis, manthramaathruka pushpamala and aandhadhi have been my most preferred slokas. I pray that THE MOTHER dwel in your ever.

    I am very much happy to see thepains you have taken to uploan aandhadi and mathrukapushpamala.

    pranams --mahadeva sharma

    chittanathan@gmail.com

    ReplyDelete
  2. I am also ambal devotee and was overwhelmed by this explanation. Tk u for this uploading.

    ReplyDelete